இன்று ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீஸ்யாகியுள்ள நிலையில், அதற்கு நடிகர் கூல் சுரேஷ் தனது ஸ்டைலிலில் வந்து review செய்து அலப்பறை செய்துள்ளார்.ரஜினி நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் இன்று வெளியாகியுள்ள வெளிவந்துள்ளது ஜெயிலர். ரசிகர்கள் படத்திற்கு நல்ல வரவேற்ப்பை அளித்துள்ள நிலையில், படத்திற்கு தன்னுடைய ஸ்டைலில் review செய்துள்ளார் கூல் சுரேஷ். பாவாடையுடன் வந்த கூல் சுரேஷ் படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூல் சுரேஷ்,
இன்று ஜெயிலர் படம் கர்நாடகா, ஆந்திர போன்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கே ரிலீஸ் ஆகி படம் சூப்பர் ஹிட் என அங்கிருந்தே தகவல்கள் எல்லாம் வந்துச்சு. அங்கு எப்படி ஹிட் அடித்ததோ அதே போல் தமிழகத்திலும் ஹிட் ஆகி உள்ளது. அதற்க்கு காரணம் ரஜினிகாந்தின் ரசிகர்கள் தான். ரஜினி சார் ஒரு கழுகு தான் என கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், ஜெயிலர் படத்தில் தன்னுடைய தங்கை தமன்னா,
கிழிந்த பாவாடையோடு டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருக்கு யாரும் அந்த கிழிந்த பாவாடையை தைத்து கொடுக்க வேண்டும் என தெரியவில்லை என கூறி, அதனால் அவருக்கு தான் இந்த பாவாடையை தைத்து எடுத்து வந்திருக்கிறேன் என தெரிவித்து, தமன்னா தங்கச்சி இனிமேல் நீக்க இந்த பாவாடையை போட்டு கொண்டு டான்ஸ் ஆடுங்க என கூறி, காவாலையா பாட்டை பாடினார்.