சின்னத்திரை பார்ப்பவர்களும், பார்க்காதவர்களும் நன்கு பரிச்சயம் ஆனவர் ரேஷ்மா. பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கோபியின் காதலியாக வருபவர்.ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும்.
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு, அதன்பின் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.அந்த சீரியல் டிஆர்பியிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அந்த சீரியலில் ரேஷ்மா நடித்து வரும் ராதிகா என்கிற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுதவிர ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகி உள்ள சீதா ராமன் என்கிற தொடரிலும் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார்.
ஆனால் இப்போது சீரியலில் முன்னணி நடிகையாகி கலக்கி வருகிறார்.சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும், சமூகவலைதளங்களில் அல்ட்ரா மாடர்னாக வலம் வருகிறார். அந்த வகையில் இப்போது டைட் ஜீன்ஸ் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கலக்கி வருகிறது.தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் பலரும், இவரால்தான் பாக்கியலட்சுமி சீரியலைப் பார்ப்பதாக ஜொள்ளு விட ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் இப்போது அவர் கேஷுவல் உடையில் அவரின் இடுப்பு டாட்டூ தெரியும் வகையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளன.