இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார்.இவருக்கென உலக மெங்கும் பல ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 10 -ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.51 வயது யோகி ஆதித்யநாத் காலில் 71 வயது ரஜினிகாந்த் விழுவதா? என நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் யோகி ஒரு சந்நியாசி, இந்து மத துறவி, அந்த அடிப்படையில் அவர் காலில் எழுந்திருப்பார் என ரஜினி தரப்பில் இருந்து கூறப்பட்டது.இந்த நிலையில் இமயமலை பயணம், ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
அவர் சென்னை விமான நிலையத்தில் யோகி காலில் விழுந்தது குறித்து கூறிய போது என்னைவிட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சன்னியாசி காலில் விழுவது எனது வழக்கம், அதைத்தான் செய்தேன் என்று விளக்கம் அளித்தார். சமீபத்தில் இமயமலை பயணத்தை தொடர்ந்து ரஜினி, உத்தரப்பிரதேசம் சென்று பாஜகவை சேர்ந்த உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதற்கு சிலர், 51 வயதான யோகி ஆதித்யநாத் காலில் 72 வயது ரஜினி விழுந்துள்ளார். அவர் மீது வைத்திருந்த மரியாதை போய்விட்டது. ரஜினிகாந்த் தன்னுடைய மரியாதையை அவரே கெடுத்து கொள்கிறார் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் ‘ஜெயிலர்’ படத்தை வெற்றிப் படமாக்கிய தமிழக ரசிகர்களுக்கு தனது நன்றி என்றும் இந்த படத்தில் சிறப்பாக பணிபுரிந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்.
Touching someone’s feet for showing respect may destroy the respect towards you.#Rajnikant #Rajnikanth #TamilNadu pic.twitter.com/KWKZKbLild
— വിപിൻ | Vipin (@authorvipin90) August 20, 2023
#Rajnikanth is 72, Yogi is 51.
Why is an elder man touching the feet of a younger politician? He lost all respect today.#LeoFilm #ThalapathyVijay #Leo#YogiAdityanath #Rajinikanth #Jailer #Jawan #Salaar #Indian2pic.twitter.com/tjFbhBnXT6
— Thalapathy Arju 𓃵 (@thalapathy_arju) August 20, 2023