தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர்.பிண்ணனிப் பாடகியும் பிண்ணனிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின. ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார். இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார்.
ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா. அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார்.அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான் ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது.
தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா.நடிப்பைத் தொடர்ந்தபடியே ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் இமான் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் ஆண்ட்ரியா.இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிசாசு 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தடுத்த படங்களில் இப்போது ஆண்ட்ரியா கவனம் செலுத்தி வருகிறார்.