நடிகை, நடனக் கலைஞர் என பன்முகத் தன்மை கொண்டவர் சுதா சந்திரன். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழியிலும் நடித்து வருகிறார். மிகப் பிரபலமான பரதக் கலைஞரான இவர் விபத்து ஒன்றில் தன் காலை இழந்தார்.
அதனால் மாற்றுத்திறனாளியான சுதா சந்திரன் அதன் பின்னரும் தன் தன்னம்பிக்கையால் தொடர்ந்து நடனம் ஆடி அசத்திவருகிறார். மேலும் மாற்றுத்திறனாளியான பின்பு அவர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் புரிந்திருக்கும் அவர் மாற்றுத்திறனாளிகளின் சிக்கல்களையும் தொடர்ந்து பொதுவெளியில் பேசிவருகிறார்.
இப்போது விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி என்பதால் தான் அனுபவித்த சிக்கல்களை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார் சுதா சந்திரன். அதில் அவர், ‘விமான நிலையத்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வசதியும் இல்லை. பிரதமர் மோடிக்க் வணக்கம். உங்களிடம் ஒரு கோரிக்கை. நான் நடிகை சுதா சந்திரன். நடனக் கலைஞர். எனக்கு விபத்தில் ஒரு கால் போய் செயற்கைக்கால் பொருத்தப்பட்டுள்ளது. நான் என் தொழில் காரணமாக அடிக்கடி விமானத்தில் பயணம் செய்கிறேன்.
அங்கே என் செயற்கைக் காலைக் கூட கழட்டச் சொல்லி சோதனை செய்கிறார்கள். சோதனை என்ற பெயரில் செயற்கை காலை வெளியே எடுத்துக்காட்ட அதிகாரிகள் கூறுகிறார்கள். ஒவ்வொருமுறை ஏர்போர்ட் செல்லும் போதும் இந்த பிரச்னையை நான் எதிர்கொள்கிறேன். நம் நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மரியாதையே கிடையாதா? எனத் இந்தக் கோரிக்கை அரசு அதிகாரிகளுக்கு சென்று அடையும் என நம்புகிறேன். ‘என உருக்கமாகக் கண்கலங்கியபடி பேசியுள்ளார். இந்தப் பதிவு இப்போது வைரலாகி வருகிறது.