சர்தார் படத்தின் ப்ரமோஷனுக்காக ராஷி கண்ணா பல்வேறு ஊர்களுக்கு சென்று வருவதாக பதிவிட்டுள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா.ராசி கன்னா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார்.இவர் 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.
தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இதைத்தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.இவர் 2017 ஆம் ஆண்டு வில்லன் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தமிழில் அடங்க மறு, அயோக்கியா, சங்க தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது தமிழில் மேதாவி, ஷைத்தான் க பச்சன் போன்ற படங்களில் நடித்துவருகிறார் .
அரண்மனை 3 படத்திலும் இவர் நடித்திருந்த நிலையில். சமீபத்தில் இவர் தனுஷுடன் சேர்ந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி திரைப்படமாக மாறியது.இதையடுத்து அவர் நடித்து வரும் 21 ஆம் தேதி வெளியாக உள்ள சர்தார் திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்கு செல்வதாக குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.