நடிகை தமன்னா தமிழ் சினிமா உட்பட தென்னிந்திய சினிமாவில் நடக்கும் கொடுமைகள் சகிக்க முடியாத அளவுக்கு இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறிய இருப்பதாவது, தமிழ் சினிமா உட்பட தென்னிந்திய சினிமாவில் கதாநாயகர்களை மையப்படுத்தியும் அவர்களை கொண்டாடும் விதமாகவும் படங்கள் எடுக்கப்படுகிறது. ஒரு திரைப்படம் என்பது தனிப்பட்ட நபரின் பெருமையை பேசுவதாகவும், அவரை கொண்டாட வைக்கும் விதமான காட்சிகளை மட்டுமே இடம் பெற்று வெளியாகிக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. ஒட்டுமொத்த திரைப்படத்தையும் பெரிய ஹீரோக்களின் புகழைப் பாடும் கதையாக உருவாக்குகிறார்கள்.
அவர்களை மனதில் வைத்து தான் கதையே எழுதுகிறார்கள். பெரிய ஹீரோக்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும். அப்படி நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாக இருந்தாலும் படம் எடுத்து வெளிக்குள் அது குறிப்பிட்ட நடிகரின் புகழைப்பாடும் படமாக மாறிவிடுகிறது.இந்த கொடுமை.. சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. திரைப்படம் என்பது கதையை கொண்டாட வேண்டும். கதையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ரசிகர்களுக்கு புதுவிதமான கதைகளை கொடுக்கும் விதமாகவும்.. புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும்.
அந்த கதை மூலம் பல்வேறு விஷயங்களை அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாகவும் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், இங்கே சதா சர்வ காலமும் ஹீரோக்களின் துதி வாடும் வேலையையே பெரிய பட்ஜெட் படங்கள் செய்கின்றன என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார். நடிகை தமன்னாவின் இந்த கருத்துக்கு ஆதரவான சில கருத்துக்களும்.., அது எப்படி நீங்கள் தென்னிந்திய சினிமாவை மட்டும் கூறலாம் என்று அவருடைய கருத்துக்கு எதிரான கருத்துகளும் இணையபக்கங்களில் பதியப்பட்டு வருகின்றது நடிகை தமன்னாவின் இந்த பேச்சு குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை பதிவு செய்யுங்கள்.