2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி தான் அவரது முதல் தமிழ் திரைப்படம். அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. துரை செந்தில்குமார் இயக்கிய எதிர் நீச்சல் (2013) மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலக் என்ற நகைச்சுவை படத்தில் தோன்றினார். இந்த படங்களில் எல்லாம் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருந்தார். பின்னர் விஜய்யின் புலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.அவருக்கு திறமை இருந்தும் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாத ஒரு நடிகையாகிவிட்டார் நந்திதா. பல படங்களில் தன்னுடைய திறமைய நிரூபிக்கும் வேடங்களை அவர் ஏற்று நடித்தாலும், அவருக்கு இப்போது வாய்ப்புகள் இல்லை.
நந்திதா ஸ்வேதா பள்ளியில் படிக்கும்போதே உதயா மியூசிக்கில் வி.ஜே.யாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான நந்தா லவ்ஸ் நந்திதாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரே அவரின் திரைப் பெயராக ஆகிவிட்டது.கன்னட சினிமாவில் நடித்து வந்த நந்திதாவை, அட்டகத்தி படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் பா ரஞ்சித். அந்த படத்தில் பூரணி என்ற கதாபாத்திரத்தில் அக்மார்க்
சென்னை பெண்ணாக நடித்திருந்தார். திறமையான நடிகை என பெயரெடுத்தும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் ஒருவராகியுள்ளார் நந்திதா ஸ்வேதா.ஆனாலும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைக் கவர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். அதற்காக சமூகவலைதளங்களில் தொடர்ந்து போட்டோஷுட் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அதற்காக அவர் படங்களில் கூட காட்டாத கவர் ச்சியைக் காட்டி தினசரி போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.