நெட்டிசனின் சர்ச்சை கேள்விக்கு நடிகை சனம் ஷெட்டி அதிரடி பதிலளித்துள்ளார். சனம் ஷெட்டி பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் சனம் ஷெட்டி. ‘அம்புலி’ படத்தில் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, மாயை, வெள்ளையாய் இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், டிக்கெட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி, ஹேஸ்டாக் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார்.அதில் ஒருத்தர் உங்களுடைய அக்குளுக்கு யார் ஷேவ் பண்ணுவார் என கேட்டிருந்தார்.நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான தர்ஷனை காதலித்து வந்தார்.
இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணமும் நிச்சயம் ஆனது. திருமணத்துக்கு சில மாதங்கள் முன்னதாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தர்ஷன் தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக கூறி போலீசிலும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் தர்ஷன்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் நடிகை சனம் ஷெட்டிக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். அவர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் சனம் ஷெட்டி. அந்த வகையில் நேற்று டுவிட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் சனம் ஷெட்டி.
இதில் ஏராளமான கேள்விகளுக்கு கூலாக ரிப்ளை செய்து வந்த சனம் ஷெட்டியிடன் சிலர் எடக்குமுடக்கான கேள்விகளையும் கேட்டனர். அதற்கும் தரமான பதிலடி கொடுத்துள்ளார். அதிரடி பதில் இதற்கு ஜில்லெட்டுனு ஒருத்தர் என்று கூலாக பதிலளித்தார். மேலும், நீங்கள் வெர்ஜினா என இன்னொரு நெட்டிசன் கேட்டதற்கு, அதை தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன செய்ய போறீங்க என அதிரடியாக பதிலளித்துள்ளார்.தற்போது இவரது பதில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.