பிரக்யா நாக்ரா பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்துள்ளார்.டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். படிக்கும் போது மாடலிங்கில் ஆர்வம் வந்துள்ளது. தொடர்ந்து மாடலிங் செய்து பல விளம்பரங்களிலும் நடித்துள்ளாராம்.சில விளம்பர படங்களிலும் நடித்தார். சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் குறும்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படி இவர் நடித்த லாக்டவுன் காதல் எனும் குறும்படம் யுடியூப்பில் வெளியானது. அஞ்சலி எனும் சீரியலிலும் இவர் நடித்தார். 2022 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘வரலாறு முக்கியம்’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பிரக்யா நாக்ராவுக்கு டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது என்றால் மிகவும் இஷ்டமாம். இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.அடிக்கடி போட்டோ ஷூட் செய்து விதவிதமான புகைப்படங்களை பதிவிடுவார். சமீபத்தில் துபாயில் நடந்த SIIMA விருது விழாவில் கவர்ச்சியான உடை அணிந்து சென்றிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. எனவே, ரசிகர்களை கவரவும், சினிமாவில் வாய்ப்புகளை பெறவும் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவதுதான்
ஒரே வழி என புரிந்துகொண்ட பிரக்யா களத்தில் இறங்கி பல புகைப்படங்களை வெளியிட்டார். இப்போது வரை அது தொடர்ந்து வருகிறது.ஜீவா ஹீரோவாக நடித்து படுதோல்வி அடைந்த வரலாறு முக்கியம் படத்தில் நடித்திருந்தார். இப்போது N4 என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிடுவதையும் அவர் நிறுத்தவில்லை. அந்த வகையில், தலையில் ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி காட்டி பிரக்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க செய்துள்ளது.