இந்த நடிகரை டேட் பண்ணனும்…! Pregnancy Test பண்ணேனா…? மஹிமா நம்பியார் ஓப்பன் டாக்…!

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் 2012 -ம் ஆண்டு வெளியான சட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினா அறிமுகமானவர் தான் நடிகை மஹிமா நம்பியார். இப்படத்தை தொடர்ந்து என்னமோ, நடக்குது, மொசக்குட்டி, அத்தனை போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த குற்றம் 23 படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது நடிகை மஹிமா நம்பியார், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்தம் என்ற படத்தில் முக்கியமானரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த போது மஹிமா நம்பியார் வாயை பிளந்துக்கொண்டு தூங்கி இருக்கிறார்.இதை சி.எஸ்.அமுதன் வீடியோ எடுத்து தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு நடிகை மஹிமா நம்பியார், மிகப்பெரிய அசிங்கம் என்று செல்லமாக தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் நடிகையை தூங்கும் போது எப்படி வீடியோ எடுத்தது தவறு என்று சொல்லி நெட்டிசன்கள் இயக்குனரை திட்டி தீர்த்து வருகின்றனர். பிரபல இளம் நடிகை மஹிமா நம்பியார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் நீங்கள் எந்த நடிகரை டேட் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை மஹிமா நம்பியார் ஹரிஷ் கல்யான்-ஐ டேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்று ஓபன் ஆக கூறினார். எந்த நடிகரை அழைத்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு போங்கள் என்று கூறுவீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்பேன் எனக்கூறினார்.

தொடர்ந்து எந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் மகேஷ்பாபுவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவருடைய திரையுலகில் அவருடைய ஒழுக்கம் குடும்ப வாழ்க்கையில் அவருடைய ஒழுக்கம் பற்றிய கேள்விப்பட்டு இருக்கிறேன் அதனால் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் . என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.அதனை தொடர்ந்து இதுவரை நீங்கள் Pregnancy Test எடுத்திருக்கிறீர்களா…? என்ற கேள்வி எழுப்பினார் தொகுப்பாளினி.இதனை கேட்டு ஷாக் ஆன Pregnancy Test இதுவரை நான் அது போன்ற செய்தது கிடையாது. என்ன கேள்வி இது…? என்று சிரித்தபடி பதில் கொடுத்து இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *