90ஸ் களில் இளைஞர்களின் பேவரட் தொகுப்பாளர் என்றால் ஸ்வர்னமால்யா தான். இவர் பல நிகழ்ச்சிகளை திறம்பட நடத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கோலிவுட்டில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஃபேமஸ் ஆனவர் ஸ்வர்ணமால்யா. சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அவருக்கு அலைபாயுதே படம் சினிமாவுக்கான கதவை திறந்து வைத்தது. அதில் ஷாலினிக்கு அக்காவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். இந்தச் சூழலில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
அதோடு மணிரத்னம் இயக்கிய அலைப்பாயுதே படத்தில் ஷாலினிக்கு தங்கச்சியாக இவர் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.சர்ச்சைகள்: சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி ஸ்வர்ணமால்யா படு பிஸியாகவே இருந்தார். ஆனால் அந்த சமயத்தில்தான் அவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தன. முக்கியமாக ஒரு சாமியாருடன் அவர் இணைத்து பேசப்பட்டது நினைவுகூரத்தக்கது. நிலைமை இப்படி இருக்க சில காரணங்களால் சினிமா மற்றும் சின்னத்திரையிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கிவிட்டார்.
ஸ்வர்ணமால்யா பேட்டிஇந்நிலையில் அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “திருமணம் செய்துகொண்டு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற முடிவை நான் எடுக்கவே இல்லை. எனது பெற்றோர்கள்தான் எடுத்தார்கள். அவர்களும் நல்ல எண்ணத்தில்தான் அந்தத் திருமண ஏற்பாட்டினை செய்தார்கள். அந்த ஒரே காரணத்துக்காகத்தான் சின்ன வயதிலேயே எனக்கு திருமணத்தை முடித்தார்கள். ஆனால் அந்த வயதில் நான் பேசியிருக்க வேண்டிய விஷயங்களை எனது அப்பா, அம்மாவிடம் நான் பேசவில்லை.
யோசிக்கக்கூட நேரமில்லாமல் அப்போது நான் ஓடிக்கொண்டிருந்தேன்.ஆபாச படத்தில் நடித்தேன். மணிரத்னம் போல் ஒரு இயக்குநர், தயாரிப்பாளரிடம் வேலை செய்த பிறகு எல்லா தயாரிப்பாளர்களும் அவர் மாதிரியே இருப்பார்கள் என்றுதான் நினைத்தேன். ஒரு ஆபாச திரைப்படத்தில் எனக்கே தெரியாமல் நடித்துவிட்டேன். அதில் பத்து நிமிடங்கள்தான் நான் நடித்தேன். அதுவும் ஒரு கெஸ்ட் ரோல்தான். அந்தப் படம் ஒரு டப்பிங் படம்தான். ஒரிஜினல் படத்தின் சிடியையும் என்னிடம் கொடுத்தார்கள்.
அந்தக் காட்சியில் நடிப்பதற்கு நான் ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டிருக்கிறேன். அப்படி என்றால் நான் எவ்வளவு விளையாட்டுத்தனமாக இருந்திருக்கிறேன். ஆனால், காலப்போக்கில் இவர் பெயர் அப்படியே மறந்து போனது, விஜய்காந்த் தங்கச்சியாக எங்கள் அண்ணா படத்தை தவிற வேற எந்த படமும் சொல்லும் படி இல்லை இவருக்கு.இதுக்குறித்து இவர் பேசுகையில் அலைப்பாயுதே முடிந்த கையோடு ஒரு படத்தில் நடிக்க கமிட் செய்தார்கள், கெஸ்ட் ரோல் என்று சொன்னார்கள், சரி 10 நிமிடம் தானே நடித்துக்கொடுக்கலாம் என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது அது அந்த மாதிரி படம் என்று
ஆனால், அதை விட வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய கொடுமை திருமணம் தான், இதை ஒப்பிடுகையில் அந்த படம் எனக்கு பெரிதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.நினைத்திருந்தால் செய்திருக்கலாம்: நான் நினைத்திருந்தால் நீதிமன்றத்துக்கு சென்று அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்க முடியும். ஆனால் அதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. ஏனெனில் ஒரு பிரச்னைக்கு மேல் இன்னொரு பிரச்னை வந்துவிடுமோ என்று எனக்கு தோன்றியது. இப்படி நான் தவறுகள் செய்திருந்தாலும் எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்றால் அது திருமணம்தான்” என்றார்.