நடிகை கங்கனா ரனாவத் டேட்டிங் செய்து வருவது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். கங்கனா ரனாவத் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர்தான் நடிகை கங்கனா ரனாவத்.நடிகை கங்கனா ரனாவத் ஹிந்தி படங்களில் பிரதானமாக நடித்து வருகிறார். இவர் எக்கச்சக்கமான விருதுகளுக்கு சொந்தக்காரர். சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் இவர் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய உறுப்பினராக இருக்கும் இவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்பட்டிருக்கிறது.பாரதிய ஜனதா கட்சியை வெளிப்படையாக ஆதரிக்கும் கங்கனா,
அக்கட்சி சார்பில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக இருக்கக்கூடிய அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திலும் நடிகை கங்கனா கலந்துக்கொண்டார். மிகவும் ஆர்வமுடன் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட கங்கனா தான் எடுத்த போட்டோக்களையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு அவரது கருத்துக்களை கூறியிருந்தார். இந்தி தவிர மற்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில்
தன்னுடைய கருத்துக்களை துணிச்சலுடன் வெளிப்படுத்துவதில் சிறிதும் தயங்காதவர்.அதேபோல், சர்ச்சைக்கு பெயர்போனவர் என்றும் கூறலாம். அரசியல் ரீதியாக அடிக்கடி கருத்துகளை வெளியிடுவதால் கடுமையாக விமர்சிக்கப்படுவார். தமிழில் இறுதியாக சந்திரமுகி 2ம் பாகம் படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில், அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் ‘ஈஸி மை டிரிப்’ இணை நிறுவனர் நிஷாந்த் பிட்டியுடன் புகைப்படம் எடுத்திருந்தார்.
அது வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது.இந்நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ள கங்கனா, ” தவறானத் தகவலைப் பரப்பாதீர்கள். நிஷாந்த் ஜிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. நான் வேறொருவரை டேட் செய்து வருகிறேன். அதை சரியான நேரம் வரும்போது நானே சொல்கிறேன். அதுவரை எங்களை இணைத்து வைத்துப் பேசாதீர்கள். ஒருவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்பதாலேயே அவருடன் இணைத்து வைத்துப் பேசாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.