தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜே கல்யாணி, அள்ளித் தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பின்னர், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த விஜே கல்யாணி, சின்னத்திரையிலும் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். கடந்த 2013-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரான ரோஹித்தை திருமணம் செய்த கல்யாணிக்கு நவ்யா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்யாணி பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.அந்த வீடியோவில், தனியாக நடக்க முடியாமல் இருக்கும் கல்யாணியை, செவிலியர்கள் கைத்தாங்கலாக பிடித்து அழைத்து வருகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக முதுகுத் தண்டு வட ஆபரேஷன் செய்யப்பட்டதால்,
தான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வாக உள்ளதாக விஜே கல்யாணி குறிப்பிட்டார். கணவரும், 5வயது மகள் நவ்யாவும் தன் மீது காட்டிய பாசத்தை என்னால் நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ளார். விரைவில் குணமடைய அந்த வீடியோவில், ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.