விஜய் டிவியில் செல்லப்பிள்ளை என அனைவரும் அழைக்கும் அளவிற்கு, தன்னுடைய இளம் வயதிலேயே விஜய் டிவியில் தன்னுடைய தொகுப்பாளர் பணியை துவங்கிய டிடி, பலமுறை சிறந்த தொகுப்பாளருக்கான விருதினைப் பெற்றவர் தான் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி. திவ்யதர்ஷினி தொகுப்பாளராக மட்டுமின்றி, ஆரம்பத்தில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை ராதிகா தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம் தயாரித்து நடித்த, அரசி, செல்வி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். பின்னர் விஜய் டிவிக்கு நுழைந்த டிடி, ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி… என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இதன் மூலம் கிடைத்த பிரபலம், இவருக்கு சில வெள்ளித்திரை வாய்ப்புகளையும் பெற உதவியது. அந்தவகையில் ஜூலி கணபதி, நள தமயந்தி, பவர் பாண்டி, சர்வம் தளமயம், காபி வித் காதல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். திவ்ய தர்ஷினியின் சொந்த வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்து கொண்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பிரபல சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், டிடியின் விவாகரத்துக்கான காரணம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் ” டிடி சில ஆண்டுகளிலேயே ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்தார். அதற்கு காரணம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல், தெரிந்துகொள்ளாமல் பாடி டிமாண்ட் காரணமாக திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்து கொண்டது தான்” எனத் தெரிவித்துள்ளார்.