கல்யாணம் ஆகல ஆனா அந்த ஆசை எனக்கு இருக்கு…! 48 வயதில்அந்த ஆசையை முதல் முறையாக வெளிப்படுத்திய நடிகை நக்மா!..!

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நக்மா. இவர் நடிகர் பிரபு தேவா நடிப்பில் 1994 -ம் ஆண்டு வெளியான காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பு ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பிஸி நடிகையாக வலம் வந்த இவர் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார்.நடிகை நக்மா 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இரண்டு தெலுங்கு படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதாகவும், அதில் ஒரு படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் அம்மாவாக நடித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் இவரிடம் திருமணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு பதிலளித்த நக்மா “அதற்கான நேரம் வரும்போது, கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என்று தன்னுடைய திருமண ஆசையை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.தற்போது 44 வயதாகும் இவர் இப்படி கூறியுள்ளது ரசிகர்களை சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நக்மா நடிப்பில் 1995 ஆம் வருடம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வெளியான ‘பாட்ஷா, திரைப்படம் தற்போது வரை எந்த திரைப்படங்களும் முறியடிக்க முடியாத பல சாதனைகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது 48 வயதான நக்மா திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், எனக்கு கல்யாணம் பண்ண கூடாது என்ற ண்ணமெல்லாம் இல்லை. எனக்கும் திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தைகள் என வாழ்வதற்கு ஆசை இருக்கிறது.ஆனால் அப்படி நடக்குமா என்பதை பொறுத்து இருந்தது தான் பார்க்க வேண்டும். நான் திருமணம் செய்து கொள்ளாமலும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்று நக்மா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *