சன் தொலைக்காட்சியில் கதையில் விறுவிறுப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கி, நடித்துவரும் இந்த தொடரில் குணசேகரன், நந்தினி, ரேணுகா, கரிகாலன் போன்ற கதாபாத்திரங்கள் மிகவும் பேமஸ்.எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதிர்வேல் எனும் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து வருபவர் ஹரிப்ரியா இசை. இவர் பிரியமானவள் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் லக்ஷ்மி வந்தாச்சு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, விதி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் ‘வாணி ராணி’ சீரியல் புகழ் விக்னேஷ் குமாருக்கும் காதல் திருமணம் நடைபெற்று கடைசியில் மணமுறிவு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு பல கிசுகிசுவில் சிக்கினார் ஹரிப்ரியா.
அவருக்கு சன் டிவியின் தொகுப்பாளர் அசாருடன் தொடர்பு இருப்பது இவர்களின் மணமுறிவிற்கு காரணம் என கூறப்பட்டது. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் அசாருடன் இணைந்து போஸ்ட் போடுவது தான் இதற்கு காரணமாக கூறப்பட்டது. ஆனால் ஹரிப்ரியா அதை மறுத்து, அசார் தன்னுடைய நண்பர் என்று விளக்கமளித்தார். சமீபத்தில் ஹரிப்ரியா இசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் புதிய ரீல் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் எதிர்நீச்சல் குடும்பம் இடம்பெற்றுள்ளது. அந்த பதிவிற்கு இது ஒரு பைத்தியக்கார குடும்பம் என்று தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சீரியல் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
சொத்தில் பிரச்சனை ஏற்பட கடும் கோபத்தில் இருக்கும் குணசேகரன் ஜீவானந்தத்தை காலி செய்ய பல பிளான்கள் போட்டுள்ளார். அதேபோல் ஜனனி ஒருபக்கம் ஜீவானந்தத்தை தேடி அலைகிறார். அடுத்து கதையில் என்ன நடக்கும் என்பதை காண தான் மக்களும் ஆர்வமாக உள்ளனர்.நந்தினி வெளியிட்ட வீடியோ இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்பிரியா கதறி அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எல்லோரும் நந்தினிக்கு யார் டப்பிங் கொடுப்பது என கேட்கிறார்கள், அது வேறுயாரும் இல்லை நானே தான் என பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram