தலைவாசல் விஜய் மகளுக்கு கிரிக்கெட் வீரருடன் திருமணம் நிச்சயமா…? ஆச்சர்யாத்தில் ரசிகர்கள்…!

தலைவாசல் விஜய் ஒரு இந்திய நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பிறந்தார் . இவர் பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.விஜய்யின் முதல் திரைப்படம் தலைவாசல் (1992), இது அவரது நடிப்பிற்காக பாராட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரது மேடைப் பெயரின் ஒரு பகுதியாக மாறியது. அவர் குறிப்பாக R.சுகுமாரனின் 2010 மலையாளத் திரைப்படமான யுகபுருஷனில் நாராயண குருவாக நடித்தார் . இது பெரும் வரவேற்பைப் பெற்றது இவர் துணை மற்றும் குணச்சித்திர வேடங்களில் காணப்படுகிறார்.

விஜய், 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது வாழ்க்கையில், 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கங்கா, யமுனா, சரஸ்வதி என்னும் சீரியலில் நடித்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்னும் சீரியலில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து அதற்கு விருதும் பெற்றார்.இவர் மலையாள சீரியலில் சிலவற்றிலும் நடித்துள்ளார்.இவரின் மகள் ஜெயவீனா ஒரு நீச்சல் வீராங்கனை ஆவார்.

இவர் இந்தியா விற்காக பல பதக்கங்களை வென்றுள்ளார்.ஜெயவீனா விற்கும் பிரபல இந்திய அணியில் உள்ள கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்திற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. பாபா அபராஜித் தற்போது இந்திய அணியில் ஆள் ரவுண்டராக இருக்கிறார்.இவர் உலகோப்பை கிரிக்கெட் போட்டியில் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் விளையாடியவர். சமீபத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்த புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *