விஜய்யை குடும்பத்தின் மேல் கவனம் செலுத்தவிடாமல் செய்யும் பிரபலம்…! கடும் கோபத்தில் உள்ள விஜய் மனைவி சங்கீதா…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகஇருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரிப்பில் படிப்பை மேற்கொண்டு வருகிறார். நடிகர் விஜய் 2022 இல் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சஞ்சய் திரைப்படத் துறையில் நுழைய விரும்புவதாகவும், ஏற்கனவே தென்னிந்தியத் திரைப்படத் துறையின் சிறந்த இயக்குனர்களிடமிருந்து பல பயிற்சிகளை பெற்று வருவதாகவும் விஜய் தெரிவித்து இருந்தார்.

தற்போது ஜேசன் சஞ்சய் குறும்பட இயக்குநராக மாறியுள்ளதாகவும், ஜேசன் சஞ்சய் ஒரு குறும்படத்தை எடுக்கும் வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் ஜேசன் விஜய் தனது தாத்தா எஸ்ஏ சந்திரசேகரைப் போலவே ஒரு படம் இயக்கத்தில் ஆர்வம் உள்ளதாகவும் அவரை போன்று புகழ்பெற்ற இயக்குனராக வருவார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் விஜய் சேதுபதியை சஞ்சய் மிகவும் விரும்புவதாகவும், அவரை ஒரு திரைப்படத்தில் இயக்கதிட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் விஜய் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், விஜய் அரசியல் வருவதற்கு அவரின் போக்கை பூசி ஆனந்த் மாற்று இருக்கிறார் என்ற எண்ணம் சங்கீதாவிடம் இருக்கிறது. அதுமட்டுமின்றி சந்திரசேகர் பேட்டியில் ஒன்றில், விஜய்க்கு யார் ஜோடியாக நடிக்க போகிறார் என்பதை சங்கீதா தான் தீர்மானிப்பார் என்று கூறி இருந்தார். ஆனால் தற்போது அப்படி இல்லை. இதற்கெல்லாம் காரணம் பூசி ஆனந்த் மற்றும் ஜெகதீஸ் தான் என சங்கீதா நினைக்கிறாராம். மேலும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், பூசி ஆனந்த்திடம் ‘என் அப்பாவைப் தேவையில்லாமல் அரசியலில் தவறான வழிக்கு கொண்டு செல்கிறீர்கள்’ என்று சண்டை போட்டதாக பயில்வான் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *