இளையராஜா என் தாய்மாமா தான்…! ஆனால் அவருடைய துன்புறுத்தல்கள் தாங்க முடியவில்லை …! மன வேதனையில் பேசிய நடிகை விலாசினி…!

சின்னத்திரை நடிகை விலாசினி தனது குடும்ப வாழ்க்கை குறித்து பேசும்போது, தன் தாய்மாமா இளையராஜாவை குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை விலாசினி. இசையமைப்பாளர் இளையராஜாவின் சொந்தக்கார பெண்ணான இவருக்கு திருமண உறவு சரியாக அமையவில்லை. சபரி ஞானபிரகாசம் என்பவருடன் ஆடம்பரமாக நடைபெற்ற திருமணம் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது. இளையராஜா உள்பட பல பிரபலங்கள் இணைந்து நடத்திய இவரது திருமண வாழ்க்கை இப்படியொரு நிலைமைக்கு வந்து நிற்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

சபரி ஞானபிரகாசம் பல மோசடி செயல்களில் ஈடுபடும் நபர் என்பது தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தினார் என்றும் அவரிடம் இருந்து பிரிந்து வாழ்வது தான் தனக்கு தற்போது நிம்மதியை அளிக்கிறது என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் விலாசினி. சாதாரண குடும்ப பிரச்சனைகளையும் தாண்டி அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் தான் அவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தனது நண்பர்களுக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் தொல்லை கொடுத்து வருகிறார் என்றும் கூறியுள்ளார். சின்னத்திரை நடிகை தவமாய் தவமிருந்து எனும் சின்னத்திரை தொடரில் நடித்து வருபவர் விலாசினி. சமீபத்தில் இவர் அளித்த நேர்காணல் ஒன்றில் இளையராஜாவை குறிப்பிட்டு பேசினார். விலாசினியின் அப்பாவின் அக்கா கணவர் தான் இளையராஜா. எனவே அவர் தனது தாய்மாமா என்று கூறும் விலாசினி, தனக்கு திரைத்துறை பின்புலம் இருந்தும் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக வேதனை தெரிவித்தார்.

தற்போது விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் விலாசினி, தனியாக தன் அம்மாவை கவனித்து வரும் நிலையில் உதவி செய்ய ஒருவரும் முன்வரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். தொகுப்பாளினி அத்துடன் திரையுலகில் நிறைய பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாகவும், அதனை கடந்து வந்திருப்பதாகவும் உருக்கத்துடன் கூறியுள்ளார். இவர் வெங்கட் பிரபு இயக்கிய பிரியாணி படத்தில் ஒரு பாடல் பாடலை பாடியுள்ளார், மேலும் RJ மற்றும் தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *