நடிகர் விஜய் சேதுபதியின் மகனா இது…? ஹீரோ லுக்கில் வெளியான அட்டகாசமான புகைப்படம்…! ஆச்சர்யாத்தில் ரசிகர்கள்…!

நடிகர் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜய் சேதுபதி விஜய் சேதுபதி எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் இப்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்துள்ளார். சீரியல்களில் நடித்து இப்போது தமிழை தாண்டி பல மொழிகளிலும் படங்கள் நடித்துவரும் விஜய் சேதுபதி அடுத்தடுத்தும் பிஸியாக படங்கள் நடிக்கிறார். ஆனால் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் படங்கள் சரியான வரவேற்பை பெறுவதில்லை, அவர் விரைவில் ஒரு மாஸ் ஹிட் கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, தனது நடிப்புத்திறமையினால் பல மொழிகள் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. ஜெஸ்ஸி என்பவரை 2003ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதிக்கு சூர்யா மற்றும் ஸ்ரீஜா என மகன் மற்றும் மகள் உள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தமிழில் சில படங்களில் தலைகாட்டியுள்ளார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் அவரது மகனின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது,

அதற்கு ரசிகர்களிடமும் நல்ல லைக்ஸ் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவிலும் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் அவரது மகன் நடித்துள்ள நிலையில், விடுதலை படத்திலும் மலைவாழ் மக்களில் ஒருவராக நடித்துவருவதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தின் இரண்டாவது பாகத்தில்

இவரது நடிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், ஹீரோவாக மாற தீவிர முயற்சியினை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் சூர்யா சேதுபதி, தன்னுடைய அப்பா விஜய் சேதுபதியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை அவதானித்த ரசிகர்கள் ஹீரோவாக நடிக்கும் அப்பாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் அரும்பு மீசையோடு சூர்யா செம்ம ஃபிட்டாக இருப்பதாக கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *