விளம்பரத்திற்காக இப்படியா…? வெளியான மாளவிகா மோகனனின் கவர்ச்சி வீடியோ…!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த மாளவிகா மோகனன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழின் முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார். பேட்ட படத்தில் பூங்கொடியாக அறிமுகமான மாளவிகா மாஸ்டர் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார் மாளவிகா.

மாளவிகா தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது. மாளவிகா மோகனன் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி போட்டோஷூட்கள் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துக்கொண்டே இருப்பார். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.  இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய மாளவிகா மோகனனிடம் ‘தங்கலான்’ பற்றி கேட்டனர். அதற்கு பதில் அளித்த மாளவிகா, “அழகான படமாக ‘தங்கலான்’ உருவாகி வருகிறது. தனித்துவமான உலகை உருவாக்குகிறோம்.

இதன் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நடக்க இருந்தது. ஒத்திகையின்போது விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் குணமடைந்ததும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். இப்படம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்கு கடினமாக இருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் நடிகர் விக்ரம் எனக்கு உதவியாக இருந்தார். சுயநலம் இல்லாத அவர், தன்னைச் சுற்றி உள்ளவர்களை நன்றாக கவனித்துக் கொள்வார்.

சக நடிகர்களை ஊக்கப்படுத்துவார். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு, வேற லெவல்’’ என்று தெரிவித்துள்ளார். பிரபாஸுடன் நடிக்கும் படம் பற்றி கேட்டபோது, “அந்தப் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறேன். அதில் ஜாலியான பெண்ணாக நடிக்கிறேன். படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’ என்றார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து குறுகிய காலத்திலேயே பிரபலமானார். தற்போது இவர் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன், விளம்பரத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார், தற்போது அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *