மணிமேகலையை தாக்கி செருப்பு போட்டோ வெளியிட்ட மாகாபா ஆனந்த்…! சொம்பு வீடியோவுக்கு பதிலடி…!

விஜய் டிவியின் மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரத்திற்கு ஒரு முடிவே கிடையாதா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கராக செயல்பட்டு வந்த மணிமேகலை, இந்த நிகழ்ச்சியில் பிரியங்காவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருந்தார்.பணம், புகழை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் என்று அவர் பதிவிட்டு வீடியோ வெளியிட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் பேசி வந்தனர். இந்நிலையில் தனக்கு எதிராக பேசிய குரேஷி, நடிகை சகிலா மற்றும் சுனிதா ஆகியோரை குறிப்பிட்டு சொம்புகள்

என்று மணிமேகலை வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் டிவி ஆங்கர் மாகாபா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செருப்பை பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மணிமேகலையை தாக்கி விஜய் டிவியின் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்த நிலையில் அவர்களை பிரியங்காவின் சொம்பு என குறிப்பிட்டு சமீபத்தில் மணிமேகலை வீடியோ வெளியிட்டு இருந்தார்.

‘சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை’ என அவர் கேட்டிருந்த வீடியோ வைரல் ஆனது.மாகாபா ஆனந்த் செருப்பு பதிவு இந்நிலையில் தற்போது மணிமேகலை தாக்கும் வகையில் மாகாபா ஆனந்த் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அமானுஷ்யம் என மணிமேகலையை மறைமுகமாக குறிப்பிட்டு, அதில் இருந்து தள்ளி இருக்க செருப்பு போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். அவரை போலவே DJ பிளாக் இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் பதிவிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *