“சீனியர் என்றால் எல்லா இடத்திலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறு..” என பிக்பாஸ் அர்ச்சனா பேசியது நெட்டிசன்களை சற்று சிந்திக்க வைத்துள்ளது.பிரபல தொலைக்காட்சியில் மிக பிரபலமாக செல்லும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தன்னுடைய 4 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது தன்னுடைய 5 ஆவது சீசனில் கடைசி கட்டத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் – மணிமேகலைக்கும், குக் – பிரியங்காவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தொகுப்பாளர்- மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார்.
இதற்கான காரணத்தை அவரது யூடியூப் சேனலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதனை கேட்ட மீடியா பிரபலங்கள் மணிமேகலைக்கு சார்பான கருத்துக்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.மணிமேகலைக்கு சார்பாக பொங்கிய பிரபலங்கள் இந்த நிலையில், பிக்பாஸ் அர்ச்சனா மற்றும் பாடகி சுசித்ரா இருவரும் பேட்டிகளில் ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய அர்ச்சனா, “ எனக்கு அந்த சம்பவம் பற்றி பேசியதாக தெரியாது. மாறாக அவர்களுடன் எனக்கு அவ்வளவாக பழக்கமும் இல்லை. ஆனால் பெண்கள் தற்போது அவர்களது வாழ்க்கையில் முன்னேற ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்களுக்கான இடத்தை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதற்கு மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். சீனியர் என்றால் அதற்கு ஒரு வரைமுறை உள்ளது…” என பேசியிருக்கிறார்.சுசித்திரா பேசுகையில், “ இப்படியான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு பிரதீப் என்பவர் தான் காரணம். பிரபல தொலைக்காட்சியில் ஒரு குழுவை உருவாக்கி சிலர் தான் இந்த சேனலில் மிகப்பெரிய ஆள் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டனர். இது எப்படியான நெப்போட்டிசம் என்றால், ஒன்றாக சேர்ந்து சரக்கு அடிப்பது,
முத்தம் கொடுத்துக் கொள்வது, இவற்றை தாண்டியும் சில வேலைகளை பார்த்து வந்தனர். இது சேனலுக்கு பிரச்சினை என்றாலும் பிரதீப் கடவுளாக பார்க்கப்பட்டார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்டவர் தொகுப்பாளர் பாவனா, தற்போது மணிமேகலை…” என பேசியிருக்கிறார். இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இது நெட்டிசன்கள் பலரை சிந்திக்கவும் வைத்துள்ளது.