ராஜ குடும்பத்தில் வாரிசை மணந்த சித்தார்த்…! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? அதை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்…!

சித்தார்த்- அதிதி ராவ் ஹைதரி தம்பதிகளின் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் கடந்த 2003ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் சித்தார்த். இதனை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கிய “இயக்கிய ஆயுத எழுத்து” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படி சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களிலேயே பெரிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்த சித்தார்த் காலப்போக்கில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கி சினிமா பக்கம் சென்று விட்டார்.கோலிவுட் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு சித்தார்த் நடிப்பில் “ சித்தா” திரைப்படம் வெளியானது. இதில் யாரும் நினைத்து பார்க்காத வெற்றி தேடிக் கொடுத்தது.திருமணம் இதனிடையே சித்தார்த்

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்த வரை மேக்னா என்ற பெண்ணை 2003-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. தொடர்ந்து இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தனித்து வாழ ஆரம்பித்தனர். இறுதியாக கடந்த 2007-ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் “மகாசமுத்திரம்” என்ற தெலுங்கு படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்த படத்திலிருந்து இவர்கள் பற்றிய வதந்திகள் பரவ ஆரம்பித்தன. இவற்றை உண்மையாக்கும் வகையில் இருவரும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதிதி ராவ் சொத்து மதிப்பு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சித்தார்த் – அதிதி ராவின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. இவர் ராஜகுடும்ப வாரிசு எனவும் கூறப்படுகின்றது. அந்த வகையில், அதிதி ராவ் திரைப்படங்களில் நடிக்க 1 கோடியும் விளம்பர படங்களில் நடிக்க ரூ.50 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஒரு அரச குடும்ப பெண் ஆவார். ஹைதராபாத்தில் மாளிகையும், மும்பை – வெர்சோவாவில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பும் இருக்கின்றன. அத்துடன் Audi Q7, Mercedes-Benz QLS, BMW X7 உள்ளிட்ட ஆடம்பர சொகுசு கார்களும் வைத்திருக்கிறார்.

சித்தார்த் சொத்து மதிப்பு இவருக்கு நிகராக சித்தார்த்திடமும் சுமார் ரூ. 70 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன. அந்த வகையில், ஹைதராபாத், சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வீடுகள் இருக்கின்றன. மேலும், ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி ஏ4 கார்கள் உள்ளிட்ட ஆடம்பர வாகனங்கள் உள்ளன. சித்தார்த் ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றன. மொத்தமாக அதிதி ராவ் ஹைதரி – சித்தார்த் இருவரின் சொத்து மதிப்பு ரூ. 130 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *