100 கோடி மதிப்பிலான சொகுசு கார்களை வைத்திருக்கும் சினிமா நடிகர் இவரா…? வியப்பில் ஆழ்த்திய ஸ்டார்…!

ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் வைத்திருக்கும் பிரபலம் பற்றிய விவரங்கள சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.சினிமாவில் டாப் ஸ்டார்களாக இன்றும் அக்ஷய் குமார், ராஜேஷ் கண்ணா, கோவிந்தா போன்ற நடிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் மம்மூட்டி. இவர் ஒரு ஆண்டில் 35 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட் மற்றும் பிளாக்பஸ்டர் கொடுத்துள்ளது. இந்த திரைப்படங்கள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.இவர் எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியில் உயர் கல்வி படித்து முடித்துள்ளார்.

அதன் பின்னர் எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் LLB படித்து முடித்துள்ளார். பின்னர், 2 வருடங்களாக வக்கீலுக்கான பயிற்சியை பெற்ற வந்துள்ளார். இதனை தொடர்ந்து மம்மூட்டியின் கவனம் முழுவதும் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில் கடந்த 1971 ஆம் ஆண்டு ‘அனுபவங்கள் பாலிச்சக்கல்’ என்ற திரைப்படத்தில் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.இந்த நிலையில் தற்போது முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் மம்மூட்டி தற்போது வரை 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தரமான படங்களின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்று இன்றும்

மலையாள சினிமாவின் மெகா ஸ்டாராக திகழ்கிறார். இத்தனை புகழுக்கும் சொந்தக்காரரான மம்மூட்டியின் தனிப்பட்ட வாழ்க்கை ஆடம்பரமிக்கவை.வெளியான தகவல்களின்படி, ஆடம்பர கார்களின் கலெக்ஷனே மம்மூட்டியிடம் உள்ளது, அவரது விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் பெரும்பாலும் தனித்துவமான 369 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட் கொண்டவை. BMW E 46 M3, Audi A7, Mini Cooper S, Mercedes மற்றும் Porsche போன்ற கார்கள் அவரது ஆடம்பர கார் கலெக்ஷனில் அடங்கும். இந்த கார்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 100 கோடி என்றும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *