காதலரை கரம் பிடித்த தனுஷ் பட நடிகை…! தம்பதிகளாக வெளியான புகைப்படங்கள்…!

நடிகை மேகா ஆகாஷ் காதலரை கரம்பிடித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நான் நடிகை மேகா ஆகாஷ். இதன் பின்னர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்திலும், தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தமிழ் உட்பட சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது கூட மேகா ஆகாஷ் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் மேகா ஆகாஷிற்கு, சாய் விஷ்ணு என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மேகா ஆகாஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த திரைபிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.சாய் விஷ்ணு, முன்னாள் மத்திய அமைச்சரும்,

காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசரின் இளைய மகன் என்பதை தெரியவந்துள்ளது. இவர் காலா கபாலி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம். மேகா ஆகாஷ்- சாய் விஷ்ணு ஆகியோரின் திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதன்போது தம்பதிகளாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *