முதல் முறையாக மாமியார் வீட்டுக்கு போன பிரேம்ஜி…! அலப்பறையை காணொளியாக வெளியிட்ட மனைவி…!

முதல் முறையாக மாமியார் வீட்டுக்கு சென்ற பிரேம்ஜி செய்த அலப்பறையை மனைவி காணொளியாக வெளியிட்டுள்ளார்.இயக்குனர் கங்கை அமரனின் இளைய மகன் தான் நடிகர் பிரேம்ஜி. இவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகிறார். பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானவர்.இதனை தொடர்ந்து பல போராட்டத்திற்கு பின்னர் தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்திருப்பார் . மாமியார் வீடு வரை சென்ற பிரேம்ஜி இந்த நிலையில் பிரேம்ஜியின் மாமியார் புதிய தொழிலை ஆரம்பித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பிரேம்ஜி பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழில் குறித்து அவரது மாமியார் பேசியது சமீபக் காலமாக சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்தது.

இதனை தொடர்ந்து, நடிகர் பிரேம்ஜி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது மாமியார் வீட்டிற்கு முதல் முறையாக சென்ற, அங்குள்ள ஊஞ்சலில் மனைவியுடன் ஆடி மகிழ்ந்துள்ளார். பின்னர் மாமியார், மனைவியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த சேட்டைகளை அவரது மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேம்ஜியை டெக் செய்து காணொளியாக பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Indhu PM (@indhu.premgi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *