வைகைப்புயல் வடிவேலு ஒரு காரில் ஏறுவார். அந்தக்காரின் ஓட்டுனராக வரும் என்னத்த கண்ணைய்யாவுக்கு கண் தெரியாது. டேக்ஸி வருமா என வடிவேலு கேட்டதுமே வரும் ஆனா வராது என சொல்லும், அவர் வடிவேலுவை பார்த்து ‘நீங்க எம்.ஜி.ஆர் மாதிரி தக, தகன்னு மின்னுறீங்க’ எனச் சொல்வார். இந்த காமெடி இப்போதும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது.
இதில் நடித்த என்னத்த கண்ணய்யா பழைய சினிமாக்களிலேயே நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொட்டே நடித்து வருகிறார். நாற்பதாண்டு போராட்டத்தில் அவருக்கு ஒரு படத்திலும் நல்ல கேரக்டர் அமையவில்லை. 40 ஆண்டுகளாக சினி பீல்டில் இருந்தாலும் அரை வயிறு சாப்பாட்டுடன் கம்பெனி, கம்பெனியாக வாய்ப்புத் தேடி அலைவதை வழக்கமாகவே வைத்திருந்தார் என்னத்த கண்ணய்யா.
நீண்ட இடைவெளிக்குப் பின்பு தான் வடிவேலு மூலம் வரும் ஆனா வராது காமெடி வாய்ப்புக் கிடைத்தது. அதன் பின்பு அடுத்தடுத்து வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. ஆனால் அதை அனுபவிக்க அவருக்கு கொடுத்து வைக்கவில்லை. வயது முதிர்வில் தவித்த அவருக்கு தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்து உயிர் இழந்துவிட்டார். ஒரு படத்தில் என்னத்த சொல்லி…என்னத்த பண்ண என வசனம் பேசுவார். அது அப்போது ரொம்ப பேமஸ்.
அந்த டயலாக்கே அவருக்கு என்னத்த கண்ணய்யா எனப் பெயரும் பெற்றுத்தந்தது. வயதான காலத்தில் வடிவேலு மூலம் நல்ல வாய்ப்பு வந்தும் காலம் அவரது உயிரை பறித்துக்கொண்டது. கடைசி வரை கஷ்டப்பட்டு வாழ்ந்து உயிர் இழந்தார் என்னத்த கண்ணய்ய்யா…இனி அதைப் பேசி என்னத்த பண்ண? என்கிறீர்களா?