பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.
ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதிலும் தன் பாகன்களிடம் மிகவும் நெருங்கிய உறவில் இருக்கும். அதிலும்தாய்ப் பாசத்தில் மனிதர்களுக்கு சற்றும் குறைவில்லாதது தான் யானைகள். அதேநேரம் சண்டை என வந்துவிட்டாலும் யானைகள் வேற லெவலில் மோதிக்கொள்ளும்.
இங்கேயும் அப்படித்தான் காட்டுயுர் ஆர்வலர் ஒருவர் கானகத்திற்குள் தன் காரில் வலம் வந்தார். அப்போது நீண்ட தந்தங்களைக் கொண்ட இரு காட்டு யானைகள் தங்களுக்குள் மிகவும் ஆக்கிரோசமாக மோதிக் கொண்டன. அவற்றை அவர், தன் காருக்குள் இருந்துகொண்டே செல்போனில் பதிவு செய்தார். காட்டு யானைகள் இப்படி ஆக்ரோஷமாக மோதுவதை இதற்கு முன்பு நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.