நடிகை ஜான்வி கபூர் திரைப்படங்களில் நடிக்கிறாரோ..? இல்லையோ..? இணைய பக்கங்களில் ஆக்டிவாக இணைய பக்கங்களில் மகாராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வயசுக்கு ஏற்ற வளர்ச்சி சினிமாவிலும் சரி தன்னுடைய உடல் அழகிலும் சரி கவர்ச்சி ராணியான காட்சியளிக்கும் நடிகை ஜான்வி கபூருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. கவர்ச்சிக்கு என்று எந்த எல்லையும் இல்லாமல் தாராளம் காட்டுகிறார் அம்மணி. அவ்வப்போது இணைய பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்து உரையாடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ரசிகர்கள் பல்வேறு கொக்குமாக்கான கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக உங்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. முத்தம் கொடுக்கலாமா..? என்ற கேள்வி எழுப்பிய அவர் ரசிகருக்கு முடியாது என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தார் அம்மணி.மட்டுமில்லாமல் தன்னுடைய உடல் அங்கங்களை அப்படி இப்படி வர்ணித்த ரசிகர்களுக்கு உங்களுக்கும், என்னை பற்றிய உங்கள் கற்பனைகளுக்கும் நன்றி என கூறினார்.
மேலும், கவலையை போக்குவதற்கு ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள் என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.அதற்கு பதில் அளித்த ஜான்விகபூர் தலையணையை கட்டிப்பிடித்துக் கொண்டு சோகமான பாடல் ஒன்றை பாடுங்கள் கவலைகள் மறந்து போய்விடும் என்று பதில் அளித்து இருக்கிறார். இவருடைய இந்த வேடிக்கையான பதில்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.