90களில் இளம் ரசிகர்களின் மோகத்தை பந்தாடிய நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் ஹீரா. தன்னுடைய கிளாமர் தோற்றத்தாலும் வசீகரத்தால் அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்டவர். ரசிகர்களை மட்டுமல்ல. சில நடிகர்களையும் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். முரளி நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான இதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஹீரா ராஜகோபால். அதன் பிறகு ஹீராவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். மள மள மளவென தமிழ் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக அப்போது முன்னணியில் இருந்த சரத்குமார் மீது காதல் வயப்பட்டார். அதன் பிறகு நீண்ட நாட்கள் இருவரும் காதலித்து வந்தனர். சரத்குமார் ஹீராவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பொண்ணு கேட்டு சென்றதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால் அதன்பிறகு இருவரின் காதலுக்கு என்னாச்சு என்பது தெரியவில்லை.இந்நிலையில் 90ஸ் காலகட்டங்களில் ரசிகர்களின் கனவு கனியாக வாழ்ந்து வந்த
நடிகை ஹீரா கடந்த 2002 ஆம் ஆண்டு புஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு சில ஆண்டுகள் மட்டுமே இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ நேர்ந்தது.2006 ஆம் ஆண்டு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தற்சமயம் வரை துணை இன்றி தனி மரமாக வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வந்தனர் இதோ வந்த புகைப்படங்கள்.