தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை ஹீரோக்கள் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கின்றனர். ரஜினி, கமல் எல்லாம் 40 வருடங்கள் கடந்தும் இன்னும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். ஹீரோயின்கள் அப்படி இல்லை. திருமணத்தோடு அவர்களின் மார்க்கெட்டும் விழுந்துவிடுகிறது.
80களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகைகளில் முக்கியமானவர் சுலக்சனா. பாக்கியராஜிற்கு ஜோடியாக தூறல் நின்னு போச்சு படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. காவியத் தலைவி சூட்டிங்கின் போது ஒரு சின்னப் பெண் சரியாக நடிக்க வில்லை என இவருக்கு அந்த வாய்ப்பு பாலச்சந்தர் முலம் கிடைத்தது. அப்படித்தான் சினிமா இண்டஸ்ட்ரீக்கு வந்தார். அதில் ஜெமினி, கவுகார் ஜானகி ஜோடிக்கு மூன்றாவது மகளாகவும் நடித்தார்.
100 படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ள சுலக்சனா பீல்டில் உச்சத்தில் இருக்கும்போதே அவரது 18 வயதிலேயே கல்யாணம் செய்தவர். மெல்லிசை மன்னன் எனப் புகழப்படும் எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் தான் இவரது முதல் கணவர். பாலசந்தரின் சிந்து பைரவி இவருக்கு ரொம்பவும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. கருத்து வேறுபாட்டால் தன் கணவரைப் பிரிந்தவருகு இரண்டு மகன்கள்.
அவரே தான் போராடி வளர்த்தார். இவரது மூத்தமகன் விஷ்ணு கப்பலில் கேப்டனாகவும், மருமகள் மென் பொருள் துறையிலும் வேலை செய்கிறார். சுலக்ஷனாவின் இளைய மகன் ஷ்யாம் விமான நிலையத்தில் சுங்க அதிகாரியாக உள்ளார். இவர்களது குடும்பப் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.