64 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வைகை புயல் வடிவேலு…! வாயை பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு மொத்தம் எத்தனை கோடி தெரியுமா…?

பிரபல நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு தனது 64ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார். ரசிகர்கள் பலரும் வடிவேலுவுக்கு சமூக வளைளத்தள பக்கங்களில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவரும் நிவையில் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. வைகை புயல் வடிவேலு
டி.ராஜேந்தரின் ‘என் தங்கை கல்யாணி’யில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தாலும்,1991ஆம் ஆண்டு கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறியப்பட்டவர் தான் வடிவேலு.

80 மற்றும் 90களில் நகைச்சுவை என்றாலே கவுண்டமணி – செந்தில்தான் என்று இருந்த நிலையில், சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து தனது திறமையை உலகத்துக்கு பறைசாற்றினார்.வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயரையும் சொந்தமாக்கிக்கொண்டார். சமூக வலைதளங்களில் வடிவேலு இல்லாமல் மீம்களை நம்மால் கடந்து விட முடியாது என குறிபிடும் அளவுக்கு மீம் கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தார், எந்த ஒரு மீம் கிரியேட் செய்யவேண்டும் என்றாலும் வடிவேலு பட காட்சிகள் முதலில் இடம்பெறும்.

தோற்றத்தையும் உடல்மொழியையும் சிறப்பாக நகைச்சுவைக்குப் பயன்படுத்துவதில் வடிவேலுக்கு ஈடு இணையே கிடையாது என்றால் மிகையாகாது. பல தமிழ் திரைப்படங்களனில் நடித்து அசுர வளர்ச்சி கண்ட வடிவேலு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அரசியலில் களமிறங்கியதால் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வெற்றிப்படங்களாக கொடுத்து வருகின்றார். இப்போது அவர் ஃபகத் பாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி சுந்தர் சி இயக்கத்திலும் வடிவேலு ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றது.

இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடும் வடிவேலுவிற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன் தற்போது வடிவேலுவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்களும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. மதுரையில் பல ஏக்கர் நிலம் வைத்திருப்பதுடன் அங்கு ஒரு சொகுசு பங்களாவையும் கட்டியிருக்கின்றார்.

அதுமட்டுமன்றி சென்னையில் 2 பங்களா, ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம். அதுமட்டுமன்றி தான் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் அதிகளவு முதலீடு செய்திருப்பதாகவும் தெரியவருகின்றது.ஒட்டு மொத்தமாக நடிகர் வடிவேலு ரூ. 150 கோடி வரையிலான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *