தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் மட்டுமே நாற்பதைக் கடந்தும் இன்னும் இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்கள். அந்த வகையில் அப்பொழுது உள்ள நடிகர்கள் முதல் இப்பொழுது உள்ள நடிகர்கள் வரை இணைந்து நடித்துள்ள ஒரே நடிகை என்றால் அது ரம்யா கிருஷ்ணன் தான். 80, 90 களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் நீலாம்பரி, சிவகாமி தேவி போன்ற கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் ரம்யா கிருஷ்னன், ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள வருகிற ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் எனப் பல நட்சத்திர பட்டாளமே உள்ளனர். ;”>சமீபத்தில் வெளியான காவாலா பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.இதுவரை ரம்யா கிருஷ்ணன் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அதில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு பெரிய ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு மற்றும் சரியாக அமையவில்லை. அதன்பிறகு ஆயிரத்து 99 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய படையப்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரின் மார்க்கெட் எகிறியது. இந்நிலையில் 52 வயதான ரம்யா கிருஷ்ணன் காவாலா பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரம்யா கிருஷ்ணன், கிளாமரான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram