நடிகை சரிதா. தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத நடிகையாக இருந்து, தற்கால சினிமா ரசிகர்கள் வரை அவரது நடிப்பை பாராட்டும்படி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பெரும் பெயரை பெற்றிருக்கார். பாக்யராஜ் முதல் கமல், ரஜினிக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார். பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்த சரிதா, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு டப்பிங் செய்யும் தொழிலை முழு நேரமாக செய்து வந்தார்.
ஹீரோயினாக நடித்து முடித்து விட்டு, திருமண வாழ்வில் ஈடுபட்ட சரிதா தற்பொழுமு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் மடோனா அஸ்வின் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. லோகேஷ் கனகராஜின் “விக்ரம்” படத்தை பார்த்த பிறகு , சரிகா எனக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது என்றார்.
அவரது திறமையான இயக்கத்தினை கண்டு அவ்வாறு குறிப்பிட்டார். விக்ரம் படத்தினை பார்த்துவிட்டு அவரை பாராட்டிப் பேசினேன். அப்பொழுது என்னுடைய ஆசையையும் அவருக்குத் தெரிவித்தேன். நடித்தால் இப்படி ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்க வேண்டும் என்று தன்னுடைய எண்ணத்தை வெளிப்படையாகவே லோகேஷிடம் தெரிவித்தது சினிமா ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை எழுப்பியுள்ளது.
View this post on Instagram