41 வயதாகும் நடிகை கத்ரீனா கைஃப்பின் சொத்து மதிப்பு…! அடேங்கப்பா இத்தனை கோடியா…?

பாலிவுட் சினிமா நட்சத்திரங்களில் மிகவும் பிரபலமானவர் நடிகை கத்ரீனா கைஃப்.கத்ரீனா கைஃப் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைஃப். இவர் 2003ஆம் ஆண்டு வெளிவந்த பூம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் ரேஸ், Ek Tha Tiger, தூம் 3, Bang Bang, Tiger Zinda Hai, Tiger 3 என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார் எனது குறிப்பிடத்தக்கது.

தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் பிரபல நடிகர் விக்கி கவுஷல் என்பவரை காதலித்து கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் நடிகை கத்ரீனா கைஃப்பின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கத்ரீனா கைஃப்பின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 263 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.மேலும் இவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 15 கோடி முதல் ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 கதாநாயகிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *