நடிகர் நரேஷ் பாபு தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களுள் ஒருவர். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரரும், மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மகனும் ஆவார். நரேஷ் பாபு தெலுங்கு திரையுலகில் தனக்கெனத் தனியிடத்தை உருவாக்கி வைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நரேஷ் பாபு, கடந்த ஆண்டு மூன்றாம் மனைவி ரம்யாவை பிரிந்து வந்த நிலையுல் நடிகை பவித்ரா லோகேஷுடன் காதலில் இருந்து வந்தார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பவித்ராவை இந்த ஆண்டு நரேஷ் பாபு 4ஆம் மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.ரம்யா ரகுபதி நடிகர் நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி ஆவார். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மனக்கசப்பினால் இத்தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவிற்கு நரேஷுக்கு நடிகை பவித்ரா லோகேஷ் உடன் ஏற்பட்ட தொடர்பே காரணம் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. 60 வயதான நடிகர் நரேஷ் பாபு இரண்டு நாட்களுக்கு முன்பு சக நடிகை பவித்ரா லோகேஷ் உடன் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார்.இந்த தகவல் அறிந்த அவரது மனைவி ரம்யா ரகுபதி அங்கு நேரில் சென்றுள்ளார். கணவரின் இந்நடவடிக்கையை கண்டித்து தகாத வார்த்தைகளால் பேசி, நரேஷ் பவித்ரா ஆகியோரை செருப்பால் அடிக்க முற்பட்டார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில் 3வது மனைவி ரம்யா அவர்கள் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து வந்துள்ளார்.
மேலும் தன் சொந்தவாழ்க்கையை வைத்து மல்லி பெல்லி என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார்.அப்படத்தில் பவித்ரா லோகேஷும் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று 3ஆம் மனைவி ரம்யா நீதுமன்றத்தில் புகாரளித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக இருத்தரப்பினரின் விவாதங்களை கேட்ட நீதிபதி ரம்யாவின் வழக்கை தள்ளுபடி செய்ததோடு, தணிக்கை குழு கர்ப்பனை கதை என்று சான்றிதழ் அளித்திருப்பதால் தடைவிதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.மேலும், மற்றுமொரு வழக்கில் பல வருடங்களாக பிரிந்துவாழும் 3 ஆம் மனைவி ரம்யா, நரேஷ் 4ஆம் மனைவியுடன் குடும்பம் நடத்தும் வீட்டிற்கு செல்ல தடை விதித்துள்ளது பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றம்.