பிரபல நடிகை மல்லிகா ஷெராவத், கவர்ச்சியாக நடிப்பதால்… தன்னை தவறான பெண் என கருதி நடிகர் ஒருவர் இரவு 3 மணிக்கு கூட போன் செய்து, படுக்கைக்கு அழைப்பதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகில் பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து பிரபலமானவர், நடிகை மல்லிகா ஷெராவத். தமிழில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் 9 வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ படத்தில், வில்லனாக நடித்திருந்த கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதே போல் கடந்த 2011-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் கலாசலா என்கிற பாடலுக்கு இவர் போட்ட ஆட்டத்திற்கு,
தற்போது வரை பல ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட், கோலிவுட் படங்களை தொடர்ந்து… ஜாக்கிச்சான் நடித்த ‘தி மித்’ என்கிற சைனீஸ் படத்திலும் நடித்திருந்தார். குறிப்பாக இப்படத்தில் ஒரு காட்சியில் உடலில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து கவர்ச்சியான வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதால், இவரை முன்னணி நடிகர் ஒருவர் அதிகாலை 3 மணிக்கு போன் செய்து, படுக்கைக்கு வரும் படி அழைத்ததாக …
பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் மல்லிகா ஷராவத் கூறியுள்ளதாவது, நான் கவர்ச்சியாக உடலை காட்டி நடிப்பதால் … என்னை தவறான பெண் என கருதி, நேரம் காலம் பார்க்காமல் போன் செய்து படுக்கைக்கு அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் சில நடிகர்கள். நான் பலமுறை மறுத்தும் திரும்ப திரும்ப இதுபோன்ற போன் கால் எனக்கு வந்துகொண்டிருக்கிறது. இனியும் அப்படி யாராவது என்னை படுக்கைக்கு அழைத்தால்
போலீசில் புகார் கொடுப்பேன் என கூறி மிரளவைத்துள்ளார். கடந்த ஆண்டு கூட, மல்லிகா ஷெராவத்… பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுக்க காரணம், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது . 46 வயது நடிகையை தொடர்ந்து சில நடிகர்கள் படுக்கைக்கு அழைத்ததாக அவரே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.