பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளாக 22 வயதில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சாரா அலி கான். ஆரம்பத்தில் படுமோசமாக குண்டாக காணப்பட்ட சாரா, உடல் எடையை குறைத்து கிளாமர் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.இந்தியில் லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில் நடிகை சாரா அலிகான் ‘ஜரா ஹட்கே ஜரா பச்கே’ என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகர் விக்கி கௌஷல் உடன் சாரா அலிகான் இணைந்து நடித்துள்ள இப்படம் நாளை (ஜூன் 2) வெளியாகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ‘ஜரா ஹட்கே ஜரா பச்கே’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விக்கி கௌஷல் மற்றும் நடிகை சாரா அலிகான் ஆகிய இருவரும் நிகழ்ச்சிக்குப் பின் லக்னோவில் உள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்தனர்.
அதற்குமுன் நடிகை சாரா அலிகான் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்காவிற்கு சென்று வழிபட்டார்.இதனிடையே, மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலுக்கு சென்ற நடிகை சாரா அலிகான், அங்கு அவர் சிறப்பு பிரார்த்தனை செய்தார். தனது தாயாருடன் சென்ற சாரா அலிகான் சிவனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவரான நடிகை சாரா அலிகான், உஜ்ஜனி மகாகாலேஷ்வர் கோயிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆனது. ஒருதரப்பினர் அவரை கடுமையாக ‘ட்ரோல்’ செய்து வருகின்றனர்.
2018ல் கெடர்நாத் என்ற படத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் டாப் நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.சமீபத்தில் நடிகை விக்கி கெளசலுடன் Zara Hatke Zara Bachke படத்தில் நடித்திருந்தார். தற்போது கையில் பல படங்களை வைத்து இருக்கும் சாரா அலிகான், கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். தற்போது சிக்ஸ் பேக் காட்டி எல்லைமீறிய போஸ் கொடுத்து கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார் சாரா அலி கான்.