தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் லிஸ்டில் சானியா ஐயப்பனும் இணைந்துவிட்டார்.மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக ஓரிரு படங்களில் நடித்து வந்த சானியா ஐயப்பன், “மழவில் மனோரமா” என்கின்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று ரன்னர் அப் போட்டியாளராக வெற்றி பெற்றார் அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் வர துவங்கியது.அதிலும் குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் வெளியான “குயின்” என்ற திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. அறிமுக நடிகை என்கின்ற விருதும் இவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால் நடிப்பில் வெளியான “லூசிபர்” மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியான “தி பிரீஸ்ட்” உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இறுதியாக இந்த 2023 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “இறுக்கப்பற்று” என்கின்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். சானியா ஐயப்பன் தற்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அவர் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், மலையாளத்தில் வெளிவந்த குயின் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.அதன் பின் சானியா, முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த சானியா ஐய்யப்பன். இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். தற்போது 21 வயதான சானியா ஐய்யப்பன் சினிமாவில் மட்டுமின்றி மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும். இந்நிலையில் இறுக்கமான ஜிம் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.