80, 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் ஸ்ரீ தேவி. இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.இன்று வரை நடிகை ஸ்ரீதேவி இந்த உலகில் இல்லை என்கிற உண்மையை பலரது மனது ஏற்க மறுக்கிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய இவரது மரணம் ஒட்டு மொத்த திரையுலகினர், மற்றும் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது நாம் அறிந்ததுதான் இவர் , தன்னுடைய நெருங்கிய குடும்ப நண்பர் திருமணத்திற்காக துபாய் சென்றார். திருமணம் முடிந்த நிலையில் மகள் ஜான்விக்காக ஷாப்பிங் செய்வதற்காக அங்கேயே இருக்க முடிவு செய்து பிரபல ஓட்டலில் தாங்கினார். பின் திடீர் இவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இதை தொடந்து ஸ்ரீதேவி குளியல் அறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி உயிர் இழந்தார் என கூறப்பட்டதால் இவருடைய மரணத்தில் மர்மம் உள்ளதாக பல தகவல்கள் வெளியானது.இந்த ஆவணப்படத்தில் ஸ்ரீ தேவி பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள், அவர் குடும்பத்தினரோடு எடுத்துக்கொண்ட அறிய புகைப்படங்கள், அவர் பல்வேறு நாடுகளுக்கு சென்ற இடங்கள் உள்ளிட்ட அறிய தகவல்கள் மற்றும் கடைசி நேரத்தில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்தும் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் கந்தராஜ் ஸ்ரீ தேவி குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக கூறினார்கள். இது ஒரு பொய்யான தகவல். ஸ்ரீ தேவி, போனி கபூர் இடையே நடந்த திருமணத்திற்கு காரணம் பணம் தான். அந்த மரணத்திற்கு காரணமும் பணம் தான். ஸ்ரீதேவி பெயரில் ரூ.200 கோடிக்கு இன்சூரன்ஸ் இருந்தது இதனால் தான் ஸ்ரீ தேவி கொல்லப்பட்டார் என்றும் தகவல்கள் வெளிவந்தது. போனி கபூர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் அதனால் தான் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துவிட்டதாக பிரபல அரசியல் விமர்சகர் கந்தராஜ் கூறியுள்ளார்.