தமிழ் சினிமாவில் காமெடியன் என்பதை தாண்டி, கதையின் நாயகனாகவும் வெற்றிபெற்றுள்ள சூரியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி, காமெடியன் என்பதை தாண்டி ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், சூரியின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து, பாராட்டுகளை குவித்தது. கான்ஸ்டேபிள் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி நடித்திருந்தார் சூரி. ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து
தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு அடுத்தடுத்து, ஹீரோவாக நடிக்க வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சூரி. இதுதவிர மேலும் சில படங்கள் இவரின் கைவசம் உள்ளது.ஹீரோவாக நடித்தாலும், தொடர்ந்து காமெடி வேடத்திலும் நடிப்பேன் என கூறி வரும் சூரி. மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடிய காலத்தில்,
பல கஷ்டங்களை அனுபவித்தவர். தங்குவதற்கு இடம் கூட, இல்லாமல் தவித்த இவருக்கு நடிகர் போண்டா மணி தான், தன்னுடைய வீட்டில் தங்க வைத்து ஆதரவு கொடுத்தார். சில திரைப்படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்று தந்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றிலும் கூறி இருந்தார்.அதே போல் பல நேரங்களில் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கூட, பட வாய்ப்புகள் தேடியவர் சூரி. குறிப்பாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த கலாபக் காதலன் திரைப்படத்தில் நடிக்க ஆள் தேவைப்படுவதாக கேள்விப்பட்டதும் அதற்கான ஆடிசனுக்கு சென்றிருக்கிறார் சூரி.
அப்போது ஒரு சீனை நடித்துக்காட்ட சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து அந்த சீனை நடிக்க தொடங்கும்போதே திடீரென மயங்கி விழுந்துவிட்டாராம் சூரி. பின்னர் அங்கிருந்தவர் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பிவிட்டு என்ன ஆச்சு என கேட்கும்போது தான், 2 நாட்கள் சாப்பிடவில்லை, அதனால் தான் மயங்கி விழுந்துவிட்டேன் என கூறி இருக்கிறார் சூரி. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து அனுப்பிவிட்டார்களாம்.