பலராலும் பலராலும் அறியப்பட்ட முகமாக இருப்பவர் காமெடி நடிகை சுமதி. இவர் சேலம் மாவட்டம் இரும்பாலை பிரதான சாலையில் அமைந்துள்ள அரியாக்கவுண்டம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்.தன்னுடைய சினிமா வருகை சிறுவயதில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் ஆகியவற்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியதாவது என்னுடைய 16 வயதிலேயே எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். என்னுடைய முதல் கணவர் என்னுடைய சொந்த மாமா தான். மூன்று குழந்தைகள். ஆனால் ஒரு கட்டத்தில் என்னுடைய முதல் கணவரால் நிறைய டார்ச்சர்களை அனுபவித்தேன். இனிமேலும் இந்த டார்ச்சனை அனுபவிக்க முடியாது என்று எண்ணி சென்னைக்கு வந்து விட்டேன்.
இங்கு வந்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டேன். அதன்பிறகு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. என்னுடைய கணவரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.வடிவேலு சாரின் படத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். ஆரம்பத்தில் நான் நடிக்கும் பொழுது 50,000 ஒரு லட்சம் என சம்பளம் கிடைத்தது. ஆனால், இப்போதெல்லாம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பதே மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது.பொதுவாக நடிகைகள் என்றாலே லட்சங்களில் சம்பாதிப்பார்கள். இவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்க போகிறது..? என்றுதான் நினைக்கிறார்கள்.
ஆனால் நான் வீட்டுக்கு வாடகை கட்ட கூட வழியில்லாமல் இருக்கிறேன். மருத்துவ செலவு பார்க்க முடிவதில்லை. அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. ஏதேனும் பட வாய்ப்பு கிடைக்குமா..? என்று ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருக்கிறேன். நடிகைகள் என்றால் வசதியாக இருப்பார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அப்படி எல்லாம் கிடையாது. நாங்களும் சாதாரண மனிதர்களை போல இன்னும் சொல்லப்போனால் அவர்களை விடவும் மோசமான நிலையில் தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம் என தன்னுடைய வேதனையை பதிவு செய்துள்ளார் நடிகை சுமதி