தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து வரும் 60 வயதான நடிகர் நரேஷ் பாபு, 44 வயதான நடிகை பவித்ரா லோகேஷ்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.பிரபல தெலுங்கு நடிகரும் மகேஷ்பாபுவின் சகோதரருமான நரேஷ் பாபு, நடிகை பவித்ரா லோகேஷை நான்காவது திருமணம் செய்து கொண்ட நிலையில், ஏன் பவித்ரா லோகேஷ் நான்காவது மனைவியாக மாறினார் என்பது குறித்து, அவரின் முன்னாள் கணவர் கூறியுள்ள தகவல்கள் கட்சியை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.கன்னட திரை உலகில், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பவித்ரா லோகேஷ்.
கன்னட திரைப்படங்களை தாண்டி, தமிழிலும் நடிகர் விஷால் நடித்த அயோக்கியா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கா.பெ.ரணசிங்கம், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘வீட்டில் விசேஷம்’ போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே மூன்று திருமணம் செய்த நரேஷ் பாபுவை 2 முறை விவாகரத்து செய்த பவித்ரா திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. திருமணம் முடிந்த சில நாட்களில் இருவரும் துபாய்க்கு ஹனிமூன் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், நடிகை பவித்ராவின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் ஒரு தகவலை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது, நடிகை பவித்ரா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர் என்பதால் அதற்காக எதையும் செய்துவிடுவார். அப்படி மிகப்பெரிய பிளானை போட்ட பவித்ரா, நரேஷ் பாபுவின் 1500 கோடி சொத்தை அபரிக்கத்தான் அவரை திருமணம் செய்திருக்கிறார்.பணத்துக்காக என்னை விவாகரத்து செய்த பவித்ராவை, நரேஷ் இன்னும் புரியவில்லை. என்றாவது நிச்சம் ஒரு நாள் இது தெரியவரும் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.