100 ரூபாய்க்கு கூட வழி இல்லாமல் குடிசையில் வாழும் பிரபல காமெடி நடிகர் !! வடிவேலுவுடன் சேர்ந்து சிரிக்க வைத்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா ?? சோகத்தில் ரசிகர்கள் !!

100 ரூபாய்க்கு கூட வழி இல்லாமல் குடிசையில் வாழும் பிரபல காமெடி நடிகர் !! வடிவேலுவுடன் சேர்ந்து சிரிக்க வைத்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா ?? சோகத்தில் ரசிகர்கள் !!

Spread the love

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்கள் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் காமெடி நடிகர் கிரேன் மனோகர், எதற்கு கிரேன் மனோகர் என்றால், இவர் நடிப்பதற்கு முன்பு வரை, படபிடிப்பு தளங்களில் கிரேன் ஆபரேட்டராக இருந்து வந்துள்ளார். பின்பு ரவிகுமாரின் சில படங்களில் தோன்றிய இவர் நல்ல நடிப்பால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று ஒரு காமெடி துணை நடிகராக வலம் வந்தார் ரவிகுமார் மட்டும் இல்லாமல் பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.

மேலும் வடிவேலுவுடன் இவர் நடித்து மெகா ஹிட்டான காமெடி சீன்கள் இருக்கின்றன, அதுவே அவரை மக்களிடையே கொண்டு சேர்த்தது. காமெடி வேடங்களில் மட்டுமே இவரை நாம் பார்த்திருக்கும் நிலையில், இவர் சிறிய படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இது பற்றி கிரேன் மனோகர் கூறுகையில், முன்பு பெரிய படங்களின் வாய்புகள் அதிகமாக வந்து கொண்டிருந்தது, அதுவும் வடிவேலு என்றால் அங்கு நானும் இருப்பேன் என்றபடி படங்களில் நடித்து வந்தேன், அவர் சினிமாவை விட்டு விலகியதும், எனக்கும் பட வாய்புகள் பெரிதாய் ஏதும் இல்லை.

சின்ன சின்ன பெயர் தெரியாத இயக்குனர்கள் இயக்கும் படங்கள், குறும்படங்கள் என நடித்து வந்தேன், இப்போது அந்த வாய்ப்புகளும் இல்லை. வடிவேலுவுடன் இருந்த போது எனக்கென ஒரு காமெடி டீம் இருந்து வந்தது, எந்த படம் என்றாலும் அவர் அந்த டீமை வைத்து கொண்டு தான் நடிப்பார். இப்போது கூட மீண்டும் அந்த டீமை நான் உருவாக்கலாமா என யோசித்திருக்கிறேன், ஆனால் அப்படி செய்தால் ஏதும் த ப்பாகி விடும் என்று நான் செய்யவில்லை. இப்போது சில நடிகர்கள் பெரிய காமெடி நடிகர்களாக மாறி விட்டனர், அவர்கள் அவர்களால் எனக்கு பட வாய்புகள் வராமல் போகிறதா என்று சிலர் கேட்டு இருக்கிறார்கள்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனக்கு எப்போதும் போல் தான் உள்ளது. அவர்கள் கூடவே சிங்கம்-3யில் கதை பிரகாரம் அனுஷ்கா வீட்டு டிரைவராக நடித்திருந்தேன். கோ-2வில் என்ற படத்தில் நடித்துள்ளேன். மொ.ட்ட சிவா கெட்ட சிவா என பல படங்கள் அவர்களாலேயே எனக்கு கிடைத்தது அதையும் நான் நல்லபடியாக செய்திருக்கிறேன்.  இப்போது தான் சில மாற்றங்களாக எனக்கு சில நல்லது நடைபெறுகிறது, எனவும் தெரிவித்து இருந்தார்.” என கூறி இருக்கிறார். இப்படி இருக்கையில், காமெடியனாக நடித்த போது தனது டிராக்கை வித்தியாசமான கேரக்டர்கள் பக்கமும் திருப்பியிருக்கிறார் கிரேன் மனோகர்.

அந்த வகையில், தற்போது இரண்டு மனம் வேண்டும் என்ற படத்தில் முதல் பாதியில் காமெடியனாக நடித்திருக்கும் அவர், இரண்டாம் பாதியில் கண் கலங்க வைக்கும் உருக்கமான காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம். ஒரு காமெடி நடிகரிடமிருந்து நெஞ்சை உருக்கும் படியான நடிப்பு வெளிப்பட்டதால் யூனிட்டே அசந்து நின்றதாம். அதனால் இந்த படத்திற்கு பிறகு கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க கேரக்டர் நடிகராகவும் கிரேன் மனோகர் வலம் வருவார் என்கிறார்கள்.


Spread the love
Author Image
Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *