ஹன்சிகாவிற்கு ஆடை தர மறுத்த பாலிவுட் டிசைனர்ஸ்…! வெளிப்படையாக பேசிய நடிகை…!

பிரபல நடிகையான ஹன்சிகாவிற்கு பாலிவுட் டிசைனர்ஸ் ஆடை தர மறுத்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நடிகை பிரபல நடிகையான ஹன்சிகா மோத்வானி, பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் ‘தேசமுருடு’ எனும் திரைப்படம் மூலம் 2007-ல் ஹீரோயினாக அறிமுகமானவர்.இவர் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘வேலாயுதம்’, நடிகர் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா என்று பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பாலிவுட்டில் இவருக்கு நடந்த புறக்கணிப்பு குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். அதில் அவர், “முதலில் தென்னிந்தியப் படங்களில் நான் அதிகம் நடித்து வந்ததால் பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர்கள் எனக்கு ஆடைகளை வழங்க மறுத்தனர்.உங்களுக்கு ஆடைகளை வழங்க எங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறினர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

என்னை நிராகரித்தவர்களே தானாக முன்வந்து, உங்கள் படம் வெளியாக இருக்கிறது.நீங்கள் ஏன் எங்களது ஆடைகளை அணியக்கூடாது? என்று கேட்கின்றனர். நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சரி என்றே சொல்கிறேன். காரணம் அவர்களுக்கும், எனக்கும் வித்தியாசம் இருக்கிறது. எந்தத் திரையுலகில் நடித்தாலும் நான் இந்திய நடிகை என்றே கூற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *