வில்லங்கமான போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுக்கும் ஷிவானி…! புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் …!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மகிவும் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, ரெட்டை ரோஜா போன்ற சீரியலிலும் நடித்துள்ளார்.கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி. இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமீபத்தில் வெளியான பம்பர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களை கலவையான விமர்சனமே கொடுத்தனர்.சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஷிவானி, பிக் பாஸ் வீட்டுக்குள் சக போட்டியாளரான பாலாவுடன் கிசுகிசுக்கப்பட்டு பல சர்ச்சைகளுக்கு நடுவில் பிரபலமானவர். இன்னும் சொல்லப்போனால் சீரியலில் நடித்ததை காட்டிலும் பிக் பாஸ் கிசுகிசுவினால் தான் ஷிவானி பிரபலானார் என்றே சொல்லலாம்.

பிக் பாஸ் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட ஷிவானிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும் தேடி வந்தது. வெள்ளித்திரையில் தலையை காட்டவேண்டும் என்று ஆசைப்பட்ட ஷிவானிக்கு, முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இயக்குனர் லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார், பின்னர் நாய் சேகர் ரிட்டன்ஸ், வீட்ல விசேஷம், டிஎஸ்பி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் ஸ்விம் சூட்டில் தோன்றி கவர்ச்சியில் கலக்கினார்.தற்போது பட வாய்ப்புகள் இல்லாத ஷிவானி சமூக வலைத்தளங்ககளில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு பட வாய்ப்புகளை பெறுவதற்கு முயற்சித்து வருகிறார். பெரும்பாலும் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை மட்டுமே பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை உருவாக்கி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் ஷிவானி, பார்பி பிங் என்ற கேப்ஷனோடு கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பார்பி பிங்கா அது எங்க இருக்கு? பிங்க் உடைன்னு சொல்லி கிறீன் கலர் ட்ரெஸ்ஸில் போட்டோவை போஸ்ட் செய்துள்ளாரே என்று ஷிவானியின் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருக்கும் ஷிவானி, கிளாமரான உடையில் எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *