2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.
தமிழைவிட தெலுங்கில் பிசியாக நடித்துவரும் நிவேதா பெத்துராஜ், தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். வேணு உடுகுலா இயக்கத்தில் நடிகர் ராணா நடிப்பில் ‘விராட பருவம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் நடித்துள்ள நிவேதா பெத்துராஜ் கதாபாத்திரம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் நக்ஸலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், படிக்கட்டுகளில் நின்றபடி சிகப்பு நிற ஃப்ளோர் லென்த் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவரை பார்த்த ரசிகர்கள், ரெட் வெல்வெட் கேக்.. ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்.. என்று என்று பாட்டு பாடி வர்ணித்து வருகிறார்கள்.