ரகசிய திருமணம் செய்த ரஜினியின் மருமகள்…! இவரின் முன்னாள் கணவர் யார் தெரியுமா…? இதோ புகைப்படங்களை கண்டு ஷாக்கான ரசிகர்கள் …!

2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் தற்போது வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை 375.4 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மேலும் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெயிலர் படத்தின் வெற்றி இன்றுடன் முடிந்துள்ளது.

ஜெயிலரின் வெற்றிக்கு நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக மிர்னா மேனனின் நடிப்பு தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய பல பதிவுகளைப் பார்க்கலாம். இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இவரை குறித்து பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. மிர்னா மேனன், நடிகர் அபி சரவணனை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது. மிர்னா மேனன் இதற்கு முன் அதிதி மேனன் என்ற பெயரில் தமிழ் படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிகர் அபி சரவணனை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *